செர்டாங், ஆகஸ்ட்.02-
பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மரத்தில் மோதியதில் மூன்று மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் சொற்பக் காயங்களுக்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.18 மணியளவில் செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் ஜாலான் பெர்சியாரான் யுனிவர்சிட்டியில் நிகழ்ந்தது.
அந்தப் பேருந்தில் 30 மாணவர்களும், 5 ஆசிரியர்களும் இருந்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
44 வயது மதிக்கத்தக்க நபர் செலுத்திய அந்தப் பேருந்து, அப்போதுதான் செப்பனிடப்பட்ட சாலைப் பகுதிக்குள் சென்றதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








