Oct 10, 2026
Thisaigal NewsYouTube

7 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் கடும் காயங்களுக்கு ஆளானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
7 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் கடும் காயங்களுக்கு ஆளானார்

ஈப்போ, ஜூன்.20-

கட்டடம் ஒன்றின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 20 வயது பெண் கடுங்காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் ஈப்போ, ஜாலான் லிம் போ செங்கில் உள்ள ஓர் அபார்ட்மெண்ட் கட்டடத்தில் நிகழ்ந்தது.

இது குறித்து தாங்கள் மதியம் 12.21 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

கீழ் தளத்தில் இரண்டாவது மாடியில் விழுந்து கிடந்த அந்தப் பெண்ணை தீயணைப்பு மீட்புப் படையினர் ஸ்ரெட்சர் உதவியுடன் கீழ் தளத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →