கோலாலம்பூர்,ஜுலை 10-
HRD Corp ஐச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் இன்று நாடாளுமன்றத்தில் காணப்பட்டனர்,அவர்களில் ஒருவரான HRD Corp இன் தலைமை சட்ட அதிகாரி மெர்லே பெர்னாண்டஸ், மற்ற அதிகாரிகளுடன் நாடாளுமன்ற மன்ற கட்டிடத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர்கள் மதியம் 1.30 மணியளவில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம்முடன் நடந்த கூட்டத்தில் இந்தக் குழு கலந்துகொண்டதாக நம்பப்படுகிறது.
முன்னதாக, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் யாரும் நீதியிலிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்று சிம் கூறியது குறிப்பிடத்தக்கது.
பொதுக் கணக்குக் குழு மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் கண்டுபிடிப்புகளை தாம் தீவிரமாகப் பார்ப்பதாகவும், இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.








