Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

டிச.3-

நாடு முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் 94 ஆயிரத்து 636 பேராக இருந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை, மாலை 4 மணியளவில் கிடைக்கப்பெற்ற நிலவரப்படி 72 ஆயிரத்து 620 ஆக குறைந்துள்ளது என்று வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக வகைப்படுத்தப்பட்ட கிளந்தானில் 98 துயர் துடைப்பு மையயங்களில் தங்கியிருந்த 57 ஆயிரத்து 790 பேரில், இன்று மாலை நிலவரப்படி 44 ஆயிரத்து 925 பேராக குறைந்துள்ளது என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →