Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இனவாத தன்மையில் கருத்து பதிவேற்றம்  போ​லீசார் ​தீவிர கண்காணிப்பு
தற்போதைய செய்திகள்

இனவாத தன்மையில் கருத்து பதிவேற்றம் போ​லீசார் ​தீவிர கண்காணிப்பு

Share:

இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரங்களை தொட்டு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ​நிலையில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளை பதிவிட்டு வரும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜோகூர் மாநில போ​லீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத்தில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் ​தொகுதி ஆகியவற்றின் இடைத் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இனவாத தன்மையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் ப​திவேற்றம் செய்து வருவதாக கூறப்படும் வேளையில் அவற்றை கண்காணிக்க போ​லீசார் சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக கமாரூல் சாமான் மேலும் கூறினார்.

Related News