புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்.21-
கெடா, புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைச் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற இரண்டு சீன நாட்டு ஆடவர்களை, அவர்கள் 'உண்மையான சுற்றுலாப் பயணிகள்' அல்ல என்ற சந்தேகத்தின் பேரில் எல்லைப் பாதுகாப்புப் படை - AKPS அதிரடியாகத் திருப்பி அனுப்பியது. அவர்கள் சமர்ப்பித்த, நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதும், சுற்றுலா என்ற பெயரில் அனுமதியின்றி இங்கு வேலை தேடும் நோக்கத்தில் வந்திருப்பதையும் அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
முறையான காரணங்களை நிரூபிக்கத் தவறிய அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் வந்த நாட்டிற்கே மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர். நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எல்லைப் நுழைவாயில்களில் சோதனைகள் இனி வரும் காலங்களில் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என AKPS துணைத் தளபதி நூராஸாம் அஹ்மாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்!








