Oct 9, 2026
Thisaigal NewsYouTube

துன் டாயிமின் 300 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் டாயிமின் 300 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை

புத்ராஜெயா, ஜூலை.11-

முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஜையினுதீன், அவரின் மனைவி தோ புவான் நயிமா மற்றும் அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மொத்தம் 300 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமானச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அந்த சொத்துக்களை துன் டாயிம் குடும்பத்தினர் எவ்வாறு சம்பாதித்தனர் என்பதற்கு இன்று வரை விவரங்களைத் தெரிவிக்கவோ அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ தவறியதைத் தொடர்ந்து அந்த 300 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களைப் பறிப்பதற்கு எஸ்பிஆர்எம் முழு வீச்சாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, சுவிர்சலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், பிரிட்டிஸ் விர்ஜினியா தீவு, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகளில் துன் டாயிம் குடும்பத்தினர் கொண்டுள்ள சொத்துக்கள், இதில் அடங்கும் என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →