Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கால்வாய் ஓரத்தில் சோற்றுப்பானையை கழுவுவதா? பேரா சுகாதாரத்துறை விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கால்வாய் ஓரத்தில் சோற்றுப்பானையை கழுவுவதா? பேரா சுகாதாரத்துறை விசாரணை

ஈப்போ, நவ. 18-


ஈப்போவில் பிரபல நாசி கண்டார் உணவகத்தின் சோற்றுப்பனையை உணவகத்தின் பின்புறம் அசுத்தம் நிறைந்த கால்வாய்க்கு அருகில் சுத்தம் செய்து கொண்டு இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த உணவகம் குறித்து பேரா மாநில சுகாதாரத்துறை விசாரணை செய்து வருவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்ற போதிலும் சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய சேவையில் உள்ள உணவகங்கள், தூய்மைக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வர வேண்டும். ஆனால், சமைப்பதற்கு பயன்படுத்படும் தட்டுமுட்டு சாமான்களை அசுத்தம் நிறைந்த இடத்தில் கழுவுவது போன்ற சம்பவத்தை மாநில சுகாதாரத்துறை கடுமையாக கருதுவதாக சிவநேசன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →