கோலாலம்பூர், டிசம்பர்.01-
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர் ஆல்பெர்ட் தேயின் வீட்டில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, எஸ்பிஆர்எம் திருப்பித் தர வேண்டும் என்று அவரது மனைவியான லீ பெய் ரீ, கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 30-ஆம் தேதியிட்ட இந்த கோரிக்கை கடித்ததை, அவரது வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜனும் Sachpreetraj Singh Sohanpal-ங்கும் எஸ்பிஆர்எம்முக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பூச்சோங்கிலுள்ள தங்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்தப் பட்டியலை அளிக்குமாறு அக்கடித்தத்தில் லீ பெய் ரீ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டப்பூர்வமாகத் தக்க வைத்துக் கொள்ள முடியாத உடமைகளைத் எஸ்பிஆர்எம் திருப்பித் தர வேண்டும் என்றும் அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சோதனையின் போது, பறிமுதல் செய்யப்படும் பொருட்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிடுமாறு கோரிக்கை விடுத்தும் கூட, அதிகாரிகள் அதற்குச் செவி சாய்க்கவில்லை என்று லீயின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு எழுத்துப்பூர்வமாக பட்டியலிடாத போது, இந்த நடவடிக்கையானது பறிமுதலாகக் கருதப்படாது, மாறாக திருட்டாக மட்டுமே கருதப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








