Aug 14, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் – பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கம் 16ஆவது பொதுத் தேர்தல் வரை தொடர வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாரிசான் நேஷனல் – பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கம் 16ஆவது பொதுத் தேர்தல் வரை தொடர வேண்டும்

Share:

பகாங் மாநிலத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இணைந்து அமைத்துள்ள ஒற்றுமை அரசாங்கம், 16ஆவது பொதுத் தேர்தல் வரை தொடர வேண்டும் என்று மாநில பாரிசான் நேஷனல் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பகாங் மாநில அரசாங்கம் தொடர்ந்து தனது பொறுப்புகளையும், மக்களின் நலனையும் முன்னிலைப்படுத்தி செயல்படும் என்று அவர் கூறினார்.

16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைக்க பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாகவும் வான் ரோஸ்டி தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் பகாங் மந்திரி பெசாருமான வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலா 17 இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் 8 இடங்களையும் கைப்பற்றியதால், பகாங் சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தன.

Related News