Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

விபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது

Share:

Perlis, Simpang Empat, Kampung Padang Benta - விற்கு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மரத்தில் மோதி கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

Yamaha Y15 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயது Nuraleya Syazreena Roslan Anuar என்ற அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் மற்றும் இடுப்பின் எலும்பு முறிவுற்றிருப்பதால் Kangar, Tuanku Fauziah மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Kangar மாவட்ட துணை போலீஸ் தலைவர் Superintendan Baeyah Abdul Wahab தெரிவித்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அத்தம்பதியர் Sungai Baru - வில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து Kampung Sungai Bugis - சில் இருக்கும் தங்களின் வீட்டிற்கு திரும்பும் வேளையில் இத்துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாக Baeyah Abdul விளக்கினார்.

சம்பந்தப்பட்ட இடத்தை வந்தடைந்த போது, பலத்த புயலினால் மரம் ஒன்று அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் மீது விழுந்ததாகவும் தவிர்க்க நேரமின்றி அதில் அவர்கள் சிக்கியதாகவும் தெரிய வந்ததாக Baeyah Abdul தகவல் அளித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்