Oct 16, 2026
Thisaigal NewsYouTube

17 வாகனங்களை பறிமுதல் செய்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
17 வாகனங்களை பறிமுதல் செய்தது

டிச.16-

பினாங்கு மாநிலத்தில் வெளிநாட்டினர் ஓட்டிய வாகனங்களைப் பிடிக்க நடத்தப்பட்ட PeWA எனப்படும் Ops Khas Pemandu Warga Asing சிறப்பு நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை 17 வாகனங்களை பறிமுதல் செய்தது.
இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், இந்தோனேசியா நாட்டுவாசிகள் மீதும் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் 116 சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகன உரிமம் காலாவதியானது, காப்பீடு இல்லாதது போன்ற குற்றங்கள் அதிகமாகக் கண்டறியப்பட்டன.
வெளிநாட்டினர் மலேசியப் போக்குவரத்து விதிகளை மீறுவதை தடுப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டது என பினாங்கு மாநிலப்ம்போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிஒக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பினாங்கு, செபராங் ஜெயாவின் Bulatan Tun Hussain Onn இல் நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →