Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கவிஷாலினியை காணவில்லை, போலீசில் புகார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கவிஷாலினியை காணவில்லை, போலீசில் புகார்

பெட்டாலிங்ஜெயா, டிச.2-


பெட்டாலிங் ஜெயா, தாமான் பெட்டாலிங் உத்தாமாவைச் சேர்ந்த 20 வயது பெண், ஜி. கவிஷாலினியை காணவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த கவிஷாலினி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் காணவில்லை என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஷாம் ஜப்பார் தெரிவித்தார்.

146 செண்டிமீட்டர் உயரம் கொண்ட அந்தப் பெண் ஆகக்கடைசியாக பார்க்கும் போது சட்டை, ஜீன்சுடன் காணப்பட்டார் என்று குடும்ப உறுப்பினர்கள் தங்கள் புகாரில் குறிப்பட்டுள்ளனர்.

கவிஷாலினி குறித்து தகவல் கொண்டு இருப்பவர்கள் 014-8882388 என்ற தொலைபேசி எண்ணில் போலீஸ் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சி.எஸ். பாலநாகனுடன் தொடர்புகொள்ளுமாறு ஷாருல்நிஷாம் ஜப்பார் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →