Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வீரர்களுக்கு சிறப்பு வெகுமதி
தற்போதைய செய்திகள்

வீரர்களுக்கு சிறப்பு வெகுமதி

Share:

கம்போடியா தலைநகர் நோன்பெனில் கடந்த 5 மே தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில், பதக்கம் வெல்லும் சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு மாநில அரசு சிறப்பு வெகுமதிகளை வழங்கும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் கைருடின் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த சீ போட்டியில் சிலாங்கூரைப் பிரதிநிதித்து 97 விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ள வேளையில், பதக்கத்தை வெல்லும் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்தச் சிறப்பு வெகுமதி வழங்கப்படும் என நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த உபசரிப்பில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் கைருடின் இதனை குறிப்பிட்டார்.

Related News