Oct 7, 2026
Thisaigal NewsYouTube

துவாங்கு முஹ்ரிஸை பதவியிலிருந்து நீக்கும் பிரகடனத்தில் மந்திரி பெசார் கையெழுத்திடக் கோரிய மனு வாபஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துவாங்கு முஹ்ரிஸை பதவியிலிருந்து நீக்கும் பிரகடனத்தில் மந்திரி பெசார் கையெழுத்திடக் கோரிய மனு வாபஸ்

நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கி முனாவிரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரகடனத்தில் மந்திரி பெசார் கையெழுத்திட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு மனுவை நால்வர் திரும்பப் பெற்றனர்.

வழக்கறிஞர் கைருல் அஸாம் அப்துல் அஸிஸ், மனுவைத் தொடர்ந்து வழக்கை நடத்த வேண்டாம் என தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மனுவைத் திரும்பப் பெற மலாயா உயர் நீதிமன்ற நீதிபதி நோர்லிஸா ஒத்மான் அனுமதித்தார்.

எனினும், இதே விவகாரம் தொடர்பாக புதிய மனுவைத் தாக்கல் செய்ய நால்வருக்கும் நீதிபதி தடை விதித்தார். மேலும், குறுக்கீடு செய்ய விண்ணப்பித்த நான்கு தரப்பினருக்கும் ஒவ்வொரு மனுதாரரும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →