Oct 7, 2026
Thisaigal NewsYouTube

கெர்தே சிஜே பயோ ஆலையை மூடுவதால் 372 பேர் பாதிப்பு – உரிமைகளைப் பாதுகாக்க மனித வள அமைச்சு தலையீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெர்தே சிஜே பயோ ஆலையை மூடுவதால் 372 பேர் பாதிப்பு – உரிமைகளைப் பாதுகாக்க மனித வள அமைச்சு தலையீடு

திரங்கானு, கெர்தேவில் சிஜே பயோ மலேசியா செண்டிரியான் பெர்ஹாட் தனது ஆலையின் செயல்பாட்டை வரும் 15ஆம் தேதி முதல் நிறுத்துவதால் 372 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த மனித வள அமைச்சான கெசுமா (KESUMA) தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.

ஜேடிகேஎஸ்எம், தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் பணிநிறைவு நலன்கள் முறையாக வழங்கப்படுவதை கண்காணித்து வருகிறது. அதேவேளை, பெர்கேசோ மூலம் இதுவரை 224 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு விவரக் குறிப்பு, வேலை வாய்ப்பு காப்புறுதி திட்டப் பலன்கள் மற்றும் மைஃபியூச்சர்ஜாப்ஸ் பதிவு தொடர்பான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மனித வள அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →