May 24, 2026
Thisaigal NewsYouTube
விஜயலெட்சுமியை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடங்கியது
தற்போதைய செய்திகள்

விஜயலெட்சுமியை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடங்கியது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் நடைப்பாதை பாதாளக்குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமியை தேடும் பணி இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

அந்த இந்தியப் பிரஜையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர் மஸ்ஜிட் இந்தியாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தங்களின் தேடல் நடவடிக்கையை தொடங்கியதாக பெர்னாமா ஆய்வுகள் காட்டுகின்றன.

தனது தாயார் பற்றிய ஆகக்கடைசியான நிலவரத்தை அறிந்துக் கொள்வதற்கு விஜயலெட்சுமியின் ஒரே மகனான 26 வயது சூரியா மாத்தையா, காலை 9 மணியளவில் அப்பகுதிக்கு வந்திருந்தார்.

இந்த மீட்புப்பணியில் நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படை, பொது தற்காப்பு படை, காவல் துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் பாதாள சாக்கடைப்பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள Indah Water Konsortium ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன.

விஜயலெட்சுமியை தேடும் பணி தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்தியாளர்கள் கூட்டடத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related News