இவ்வாண்டு சனவரி முதல் செப்டம்பர் வரை, பொது இடத்தில் புகை பிடித்தக் குற்றத்திற்காக 2 மில்லியன் வெள்ளிக்கும் மேலானத் தொகையை பேரா மாநில அரசு சேகரித்துள்ளது என அம்மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் நலனுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 1.3 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 2,274 சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்ட நிலையில், 8,465 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக சிவநேசன் மேலும் கூறினார்.
அடுத்த ஆண்டில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு அன்றாடப் பரப்புரைகளும் பொது இடங்களில் நினைவூட்டல் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.








