Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மூன்று வானனங்கள் விபத்து: டிரெய்லர் லோரி ஓட்டுநர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று வானனங்கள் விபத்து: டிரெய்லர் லோரி ஓட்டுநர் கைது

குளுவாங், நவ.15-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், ஜோகூர், குளுவாங், மாச்சாப் அருகில் இன்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து தொடர்பில் டிரெய்லர் லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் கடுமையான காயங்களுக்கு வித்திட்ட இந்த விபத்து தொடர்பில் 40 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் நிக் முகமட் அஸ்மி ஹுசேன் தெரிவித்தார்.

உரமூட்டைகளை ஏற்றி வந்த அந்த டிரெய்லர் லோரி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலை இரும்புத்தடுப்பை உடைத்துக்கொண்டு, எதிர்திசையில் நுழைந்து தடம்புரண்டது. அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளும், ஹோண்டா சிவிக் ரக காரும் அந்த லோரி மீது மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மண்டதாக நிக் முகமட் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →