சுயேட்சை வேட்பாளராக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிப் பெற்றால், பினாங்கு முதலமைச்சராக சொவ் கொன் யொவ்வை ஆதரிப்பதாக பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டேவிட் மார்ஷலும், பாகான் டலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் முனியாண்டியும் இன்று அறிவித்துள்ளனர்.
சொவ் கொன் யொவ் வை ஆதரிக்கும் சத்தியப்பிரமாண வாக்குமூல பிரகடனத்தையும் அவர்கள் அறிவித்தனர். டிஏபியில் தாங்கள் உறுப்பினராக இல்லை என்ற போதிலும் மாநில முதல்வராக சொவ் கொன் யொவ்வை தேர்வு செய்யும் உறுதிப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்களின் ஆதரவை வழங்க போவதில்லை என்றும் டேவிட் மார்ஷலும் சதீஷ் முனியாண்டியும் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


