Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தாயாரை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாயாரை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

குளுவாங், டிச.10-


ஜோகூர், குளுவாங், பெல்டா ஆயர் ஹீத்தாமில் தனது சொந்த தாயாரை கொன்றதாக ஆடவர் ஒருவர் குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

20 வயது முகமட் ஹரிஸ் ஃபர்ஹான் மஸ்ருடின் என்று அந்த வேலையற்ற இளைஞர், மாஜிஸ்திரேட் முஸ்தாஹின் சுகர்னோ முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் தமது 47 வயது தாயரான ஸரினா ஜப்பார் என்பவரை கொன்றதாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →