Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கடலில் பெண்ணை தள்ளியவர் அவரின் காதலனா?
தற்போதைய செய்திகள்

கடலில் பெண்ணை தள்ளியவர் அவரின் காதலனா?

Share:

பினாங்கு பாலத்தில் ஓர் ஆணும், பெண்ணும் கடலில் குதித்த சம்பவத்தில் அவர்கள் காப்பாற்றப்பட்ட போதிலும் அந்தப் பெண்ணை முதலில் கடலில் தள்ளியவர் அந்த ஆண் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலர்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படும் 40 வயது பெண்ணை அவரின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு போலீஸ் அதிகாரியான 37 வயது நபர் கடலில் தள்ளியதாக கூறப்படுகிறது.

பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல என்று நம்பப்படும் அந்த போலீஸ்காருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையில் பினாங்கு பாலத்தில் காரின் அருகில் வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அப்போது அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் தம்மை திடீரென்று கடலில் தள்ளிவிட்டதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் காவ் கோக் சின் தெரிவித்துள்ளார். .

நேற்று இரவு 7.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்