தெலுக் இந்தான், செப்டம்பர்.26-
நான்கு போலீஸ்காரர்களைக் கொலை செய்ய முயன்றதாக 35 வயது ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி நுர்ஹமிஸா ஷைஃபுடின் முன்பு அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது முகமட் அமிருல் அஸ்ராஃப் முகமட் சைபுல் என்ற அந்த ஆடவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11 மணியவில், முவாலிமில் உள்ள பெஹ்ராங் ஓய்வுப் பகுதியில், எரிபொருள் நிரப்புமிடம் ஒன்றில், அவர் அந்த 4 போலீஸ்காரர்களைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டம், பிரிவு 307(1) இன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.








