Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முகைதீனின் மருமகனை கண்டு பிடிப்பதில் உள்துறை அமைச்சு உதவும்
தற்போதைய செய்திகள்

முகைதீனின் மருமகனை கண்டு பிடிப்பதில் உள்துறை அமைச்சு உதவும்

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகனை மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பீஆர்எம் தேடி வரும் வேளையில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிப்பதில் எஸ்பீஆர்எம்மிற்கு தேவையான உதவிகளை உள்துறை அமைச்சு நல்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

எஸ்பீஆர்எம் மட்டுமல்ல, எந்தவொரு அமலாக்க ஏஜென்சிக்கும் உதவிகள் தேவைப்படுமானால் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் உள்துறை அமைச்சு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

முகைதீனின் மருமகன் முஹம்மாட் அட்லான் பெர்ஹான்னை பிடிப்பதற்கு அனைத்துலகப் போலீஸ் பிரிவான இண்டர் போல் உதவி நாடப்படும் என்று எஸ்பீஆர்எம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்து இருப்பது தொடர்பில் சைபுடின் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்