Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் மூவர் உயிரிழந்தனர், நால்வர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தங்காக், ஜன.25-

ஜோகூர், தங்காக், குனுங் லெடாங் தோட்டம் அருகில் ஜாலான் மூவார்-செகாமாட் சாலையின் 45 ஆவது கிலோ மீட்டரில் ஒரு காரும், SUV வாகனமும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இதர நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் நிகழ்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

இதில் புரோடோன் வீரா ரக கார் 53 வயது ஓட்டுநரும், காரில் பயணித்த 56 வயது ஆடவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Toyota Harrier SUV வாகனத்தில் பயணித்த 61 வயது நபர், தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக ரோஸ்லான் குறிப்பிட்டார்.

இரு வாகனங்களிலும் பயணித்த தலா இருவர் கடும் காயங்களுடன் தங்காக் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரோஸ்லான் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →