Mar 24, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கில் பாஸ்போர்ட்  திட்டத்தில் HRD Corp. நிறுவனம் / மனித வள அமைச்சையும், இயக்குநர் வாரியத்தையும் ஏமாற்றியுள்ளதா?
தற்போதைய செய்திகள்

ஸ்கில் பாஸ்போர்ட் திட்டத்தில் HRD Corp. நிறுவனம் / மனித வள அமைச்சையும், இயக்குநர் வாரியத்தையும் ஏமாற்றியுள்ளதா?

Share:

கோலாலம்பூர், ஜூலை 06-

லஞ்ச ஊழல், முறைகேடு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படும் மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. (எச்.ஆர்.டி.எப். கோர்ப்) நிர்வாகம் மலேசிய லஞ்ச ஊழல் ஆணையமானச SPRM விசாரணைக்கு இலக்காகியுள்ளது.

Human Resourse Development Corporation என்று அழைக்கப்படும் HRD Corp. நிர்வாகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் மனித வள அமைச்சு தற்காக்காது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று எச்சரித்துள்ளார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளிக்கும் மிகப்பெரிய கடப்பாட்டை கொண்டுள்ள மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. ப்பில், மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அந்த நிறுவனத்னை SPRM விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று PAC எனப்படும் தேசிய கணக்காய்வுக்குழுத் தலைவர் வான் சூரிய வான் மோஹட் ரோட்சி நேற்று பரிந்துரை செய்துள்ளார்.

இதன் தொடர்பில் HRD Corp. நிர்வாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக PAC கேள்வி எழுப்பியுள்ள விவகாரங்களை மற்றும் அதன் கோப்புகளை SPRM- யிடம் ஒப்படைக்குமாறு மனித வள அமைச்சின் தலைமைச் சேரி காயிருள் டுழைமீ டவுட் மற்றும் HRD Corp. ப்பில் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீத் ஷைக் டவுட் ஆகியோருக்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய கணக்காய்வுக்குழு கண்டு பிடித்த விஷயத்தில் ஸ்கில் பாஸ்போர்ட் திட்டத்திற்கு HRD Corp. இயக்குநர் வாரியம் அல்லது மனித வள அமைச்சு உண்மையிலேயே ஒப்புதல் அளித்துள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

காரணம், இயக்குநர் வாரிய உறுப்பினர்களை விசாரணை செய்ததில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. அந்த திட்டத்தை அங்கீகரிப்பதில் மனித வள அமைச்சின் துணை தலைமை செயலாளரின் கையொப்பத்தை HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரி பெற்றுள்ளார்.

அத்திட்டத்தை அங்கீகரிப்பதில் அமைச்சின் துணை தலைமை செயலாளருக்கு அதிகாரம் கிடையாது என்று HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரிக்கு நன்கு தெரிந்திருந்தும் , அவருடைய கையெழுத்து பெறப்பட்டு Neominds Sdn Bhd என்ற நிறுவனத்துடன் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

ஆனால், HRD Corp. இயக்குநர் வாரியத்திடம், இந்த திட்டத்தை மனித வள அமைச்சு அங்கீரித்து இருப்பது போல ஒரு தோற்றத்தை HRD Corp. தலைமை செயல்முறை ஏற்படுத்தி, நம்பவைத்துள்ளார். இந்த முறைகேட்டில் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தாங்கள் சந்தேகிப்பதாக தேசிய கணக்காய்வுக்குழு கூறுகிறது.

எனவே HRD Corp. குறித்து SPRM முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய கணக்காய்வுக்குழுத் தலைவர் வான் சூரிய வான் மோஹட் ரோட்சி பரிந்துரை செய்துள்ளார்.கணக்காய்வுக்குழுத் தலைவர் வான் சூரிய வான் மோஹட் ரோட்சி பரிந்துரை செய்துள்ளார்.

Related News