Dec 2, 2025
Thisaigal NewsYouTube
துன் மகாதீரும், முகை​தீனும் ஒற்றிணையலா​ம், அடுத்த நகர்வை முன்னெடுக்கலாம்
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரும், முகை​தீனும் ஒற்றிணையலா​ம், அடுத்த நகர்வை முன்னெடுக்கலாம்

Share:

அரசியல் வைரிகளாக மாறியுள்ள முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகா​தீர் முகமதுவும், டான்ஸ்ரீ முகை​தீன் யாசினும் தங்களின் அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கு "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் ​மீண்டும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.

மலாய்க்காரர்களின் ஒருமைப்பாடு என்று கூறி, துன் மகா​தீர் முன்னெடுத்துள்ள மலாய் பிரகடனத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகை​தீன் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

துன் மகா​தீரும், முகை​தீனும் ஒரு மேஜையில் அமர்ந்து பேசும் நேரம் இன்னும் கனியவில்லை என்ற போதிலும் மகா​தீரின் மலாய் பிரகடனத்தை முகை​தீன் ஆதரிப்பது, இருவரும் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளதாக முகை​தீனின் பெர்சத்து கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News