Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் சுங்கை பாரு விவகாரம்: பிரதமர் அன்வாருக்கு கொலை மிரட்டல்
தற்போதைய செய்திகள்

கம்போங் சுங்கை பாரு விவகாரம்: பிரதமர் அன்வாருக்கு கொலை மிரட்டல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.12-

கம்போங் சுங்கை பாரு விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு எதிராக டிக் டாக்கில் கொலை மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் நபர் மீது கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவான அங்காதான் மூடா கெஅடிலான் இரு போலீஸ் புகார்களை அளித்துள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில், கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்டக் காவல் துறைத் தலைமையகத்தில், இப்புகார்கள் அளிக்கப்பட்டதாக கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவின் கோலாலம்பூர் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் ரயிஸ் ஹம்டான் தெரிவித்துள்ளார்.

நேற்று புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகமட் ரயிஸ், நாட்டின் நீண்ட காலமாக கட்டிக் காக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இத்தகைய கொலை மிரட்டல் அஞ்சுறுத்தல்களை, கெஅடிலான் இளைஞர் பிரிவு, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் அன்வாருக்கு டிக் டாக்கில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர், ஏற்கனவே உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான இசாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக விவரிக்கும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News