Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூரில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூரில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.14-

அடுத்த வாரம் இறுதியில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகரம், lockdown எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகரம் முழுமையாக மூடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் மாநகரின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு நாடு முழுவதிலிருந்து 16 ஆயிரம் போலீஸ்காரர்கள் களம் இறக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 23 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரை கோலாலம்பூர் மாநகரம் உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும். பிரதான சாலைகளில் போக்குவரத்து மட்டும் சீராக இருப்பதை போலீசார் உறுதிச் செய்வர் என்று அவர் தெரிவித்தார்.

Related News