ஓரின உறவில் நாட்டம் கொண்டவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சமயவாத கும்பலைச் சேர்ந்த எட்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜுலை 3 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கோலாலம்பூரில் உள்ள ஒரு வர்த்தக மையத்தின் எதிரே திரண்ட 18 க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், ஓரின உறவில் ஆர்வம் கொண்டவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல் போலீசார் அணுகக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஓரின உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சியைக் கொண்ட 48 விநாடி ஓடக்கூடிய காணொளியை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் சுஹைலி முஹமாட் சயின் கேட்டுக்கொண்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


