பிரம்படி தண்டனையைப் பெறும் முதல் மக்கள் பிரதிநிதி மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் ஆவார்.
மூடா கட்சியின்ன் தலைவருமான அவர், நம்பிக்கை மோசடி, சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பணமோசடி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரம்படிகளோடு. 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு கோடி வெள்ளி அபராதமும் ஷெட் செடிக் க்கிற்கு விதிக்கப்பட்டுள்ளது,
முன்னதாக, ஊழல் வழக்கை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் அரை நூற்றாண்டைக் கடந்த வயதுடையவர் என்பதால் பிரம்படி கொடுக்கப்பட வில்லை.
தமக்குக் கொடுக்கப்பட்டத் தண்டனை குறித்து பேசிய ஷெட் செடிக், மலேசியாவில் ஒரு நல்ல தலைவர் வெள்ளை நிறத்தைக் காடிலும் வெண்மையாக இருக்க வேண்டும் என்றார்.
மலேசியாவை மாற்றுவது என்பது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல, மாறாக கட்சிகளையும் ஆளுமைகளையும் தாண்டி கட்டியெழுப்பும் முயற்சியாகும். அவ்வாறான முயற்சியைக் கொண்டு யார் ஆட்சி செய்தாலும் நாடு சரியான பாதையில் செல்லும் என்றார் அவர்.
தமது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுத்த பிறகு இன்று மாலை 5.00 மணி அளவில் நடத்தப்பட இருக்கும் செய்தியாளர் சந்திப்பில் தாம் தெரிவிக்க இருப்பதாக ஷெட் செடிக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாகவே தாம் சில முடிவுகளை எடுத்து விட்டதாகவும் பதவி விலகுவது உட்பட அனைத்து முடிவுகளும் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.








