Oct 17, 2026
Thisaigal NewsYouTube

அமைதிக்காக்கும் பணியிலிருந்து மல்பாட் பின்வாங்காது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைதிக்காக்கும் பணியிலிருந்து மல்பாட் பின்வாங்காது

லெபனானில் ஐ.நா. படையில் இணைந்து அமைதிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள MALBATT எனப்படும் மலேசிய இராணுவப்படை வீரர்களில் அறுவர் காயம் அடைந்த போதிலும், ஐ.நா.வின் அடுத்த உத்தரவு கிடைத்தாலொழிய, அமைதிக்காக்கும் பணியிலிருந்து மலேசிய வீரர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்று மலேசிய இராணுவப்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் லெபானான், Saida அரங்கிற்கு அருகில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் மல்பாட் படையில் இணைந்துள்ள மலேசிய வீரர்கள் அறுவர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து மலேசிய இராணுவப்படையின் தளபதி Jeneral Tan Sri Mohammad Abdul Rahman, மலேசியாவின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

ஐ.நா.வின் இந்த அமைதிக்காக்கும் பணியில் மலேசியாவைச்சேர்ந்த 850 வீரர்கள் ஈடுபட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →