Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பிள்ளையைச் சித்ரவதை செய்த மாது கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிள்ளையைச் சித்ரவதை செய்த மாது கைது

கோல சிலாங்கூர், ஜூன்.30-

தனது வளர்ப்பு மகளைச் சித்ரவதை செய்து, கைவிட்டதாக நம்பப்படும் மாது ஒருவரைக் கோல சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8. 15 மணியளவில் பெறப்பட்ட ஓர் அவசர அழைப்பைத் தொடர்ந்து 54 வயதுடைய அந்த மாது கைது செய்யப்பட்டதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

உடலில் கடும் காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, தற்போது தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →