ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.19-
பகடிவதைச் சம்பவங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு கல்வி நிலையமும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதிச் செய்ய உடனடியாக கடும் அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்தப்பட வேண்டும் என துங்கு இஸ்மாயில் வலியுறுத்தினார்.
இன்று ஜோகூர் பாருவில் புத்ரி கேபிஜே நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 10 வயது சிறுவன் இஸ்ஸூல் இஸ்லாம் அஸுவான் இசாய்டியை நேரில் சென்று நலம் விசாரித்தப் பின்னர் துங்கு இஸ்மாயில் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சிறுவன் இஸ்ஸூல் இஸ்லாம், மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துங்கு இஸ்மாயில் வருகையின் போது ராஜா மூடா ஜோகூர், துங்கு இஸ்கண்டார் துங்கு இஸ்மாயிலும் உடன் இருந்தார்.








