Sep 26, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை அதிகாரியின் மறைவு: ஊழியர் நலனில் சமரசம் இல்லை எனத் துறை விளக்கம்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை அதிகாரியின் மறைவு: ஊழியர் நலனில் சமரசம் இல்லை எனத் துறை விளக்கம்

Share:

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்த அதிகாரி அஸ்மான் பின் மாஸ்னியின் மறைவுக்கு மலேசிய குடிநுழைவுத்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

மறைந்த அதிகாரியின் இடமாற்றக் கோரிக்கை குறித்து விளக்கமளித்த தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான், ஆகஸ்ட் 2025-இல் பெறப்பட்ட அவரது விண்ணப்பம் பரிசீலனையில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இடமாற்றங்கள் எப்போதும் சேவையின் தேவை மற்றும் அதிகாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

கடந்த 2023 முதல் 2025 வரை வரப்பெற்ற 2,860 இடமாற்ற விண்ணப்பங்களில், 1,332 அதிகாரிகளுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் நலன்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் டத்தோ ஜக்காரியா உறுதியளித்துள்ளார்.

Related News