Apr 15, 2026
Thisaigal NewsYouTube
ஹார்முஸ் நீரிணை முடக்கம்: அமெரிக்காவுக்கு மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

ஹார்முஸ் நீரிணை முடக்கம்: அமெரிக்காவுக்கு மலேசியா எச்சரிக்கை

Share:

ஹார்முஸ் நீரிணையை முடக்கும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது. இது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பாதிப்பதோடு, பொருளாதார நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் எச்சரித்துள்ளார்.

இன்று ரெம்பாவ், யுஐடிஎம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த நீரிணை முடக்கப்பட்டால் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து தடைபடும்; இது உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு ஒட்டுமொத்த உலகத்தையும் பணயக் கைதியாக மாற்றக்கூடாது" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை முடக்க அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், மலேசியா இந்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

Related News