கூலிம், நவம்பர்.24-
இன்று காலை 8.30 மணி அளவில் கெடா, கூலிம், சீடிம் நீர் வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கூலிம் யுனிகேஎல் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார்.
21 வயதுடைய நோர் ஐரில் ஹஸிமி மன்சோர் என்ற மாணவரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹஜி ஸுல்கிஃப்லி அஸிஸான் அடையாளம் கூறினார்.
சீடிம் ஆற்றின் நீரின் மட்டம் உயர்ந்த நிலையில் அந்த பல்லைக்கழக மாணவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
நீரில் மூழ்கிய அந்த மாணவனை நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் அவர்களால் நண்பரைக் காப்பாற்ற முடியாத நிலையில் அருகில் உள்ள கிராமத்து மக்களின் உதவியை நாடியதாக ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.
பின்னர் தீயணைப்புப் படயினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய அந்த மாணவனின் உடல் மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
உயிரிழந்த மாணவன், கிளந்தான், தாமான் மேராவைச் சேர்ந்தவர் என்று அவர் அவர் தெரிவித்தார்.








