மாராங், டிசம்பர்.09-
திரங்கானு மாநிலம் மாராங்கில் உள்ள பள்ளி ஒன்றின் ஆண்கள் விடுதியில், இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் இரு புகார்களை அம்மாநில போலீசார் பெற்றுள்ளனர்.
இச்சம்பவத்திற்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயதைச் சேர்ந்த இரு மாணவர்கள் குறித்து விடுதி பாதுகாவலர் நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
17 வயதுடைய கற்றல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவரை, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, ADHD எனப்படும் கவனக்குறைபாடு கொண்ட 13 வயது மாணவரை, ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக மற்றொரு 16 வயது மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்புகார்களின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அம்மாணவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மாராங் போலீஸ் தலைவர் சோஃபியான் ரெட்ஸுவான் தெரிவித்துள்ளார்.








