கோல லங்காட், அக்டோபர்.15-
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் வீசிய பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் சிலாங்கூர், கோல லங்காட்டில் 10 வீடுகளின் கூரைகள் பறந்தன.
மாலை 4.20 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது. பல வீடுகளில் கூரைகள் பறந்ததுடன், வீட்டு வளாகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மலேசிய பொது தற்காப்புப் படையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கொலோனல் ஃபஸ்லிஷா முஸ்லிம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் ஒரு சமயப்பள்ளியும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








