Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு பிரதேச அமைச்சு ​மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு பிரதேச அமைச்சு ​மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்

Share:

விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்குமாயின், கூட்டரசு பிரதேச அமைச்சை மீண்டும் நடைமுறைப்படுத்த பிரதமர் பரிசீலனை செய்வார் என தாம் நம்புவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்போது தமக்கு பிரதமர் எந்த அமைச்சை கொடுத்தாலும் அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு போதுமான அனுபவத்தை தாம் கொண்டு இருப்பதாக சாயிட் கூறினார்.

தற்பொழுது, புறநகர் மற்றும் கூட்டரசு மேம்பாட்டு அமைச்சராக தாம் பொறுப்பில் இருந்தாலும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தம்மை முக்கியமான பொறுப்புகளிலும் அமர்த்தி உள்ளார் என்று அம்னோ தலைவருமான சாஹிட், கட்சி​யின் சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் விளக்கினார்.

Related News