Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விரைவு பேருந்து கவிழ்ந்தது, பதற்றத்தல் 20 பயணிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விரைவு பேருந்து கவிழ்ந்தது, பதற்றத்தல் 20 பயணிகள்

உலுசிலாங்கூர், டிச.5-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 427.1 ஆவது கிலோமீட்டரில் உலு சிலாங்கூர் அருகில் விரைவு பேருந்து ஒன்று , வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி, கவிழ்ந்ததில் சுமார் 20 பயணிகள் பீதியில் மூழ்கினர்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்தது. 20 பயணிகளுடன் அந்த பேருந்து ஈப்போவிலிருந்து சிரம்பானை நோக்கி சென்று கொண்டு இருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அகமட் பைஸால் தாஹ்ரிம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து தடம்புரண்டு, நெடுஞ்சாலை அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் பேருந்து ஓட்டுநர் சொற்ப காயங்களுக்கு ஆளானார். அவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 20 பயணிகள் காயமின்றி உயிர் தப்பியதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →