Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

கோலாலம்பூர், ஜூன்.26-

மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், லஞ்சம் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிலிருந்து அப்பீல் நீதிமன்றம் ஒருமனதாக விடுவித்து இருப்பதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

இது போன்ற வழக்குகளில் மேல்முறையீடு செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும். இது நீதி பரிபாலனத்தினால் வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும் என்று சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

சட்டத்துறை அலுவலகம் இவ்வாறு மேல்முறையீடு செய்வதானது, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக பாரபட்சமாக செயல்படுவதாகப் பொருள்படாது. மாறாக, அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழுந்த சட்டச் சிக்கல்களைக் கூட்டரசு நீதிமன்றத்தால் ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் என்பதை உறுதிச் செய்வதற்காக இந்த மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வது வழக்கமானதாகும் என அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →