Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மேலும் 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மேலும் 12 பேர் கைது

Share:

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் 'Penjana Kerjaya' நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக நிறுவனங்களைச் சேர்ந்த மேலும் 12 மேலாளர்களையும், இயக்குநர்களையும் எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

அந்த 12 நபர்களும், தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்ததாக கூறி, அவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சொக்சோவிடம் பணம் கோரியுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.

நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட சோதனையில், ஏற்கெனவே 47 இயக்குநர்கள் கைது செய்யப்பட்ட வேளையில், நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட ஓப் ஹையர் 2.0 என்ற அதிரடி சோதனையில், 29க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் 12 மேலாளர்களும், இயக்குநர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம்.தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள வேளையில், அவற்றில் 41 ஆண்களும் 18 பெண்களும் பிடிப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News