ஷா ஆலாம், நவம்பர்.06-
கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை மலாய்க்காரர்களிடமிருந்து ரோமானியர்கள் கற்றுக் கொண்டனர் என்று கூறப்படுவதற்கு வரலாற்று ரீதியாக எவ்விதச் சான்றும் இல்லை என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் மலாய் தொழில்நுட்ப வரலாற்றுப் பேராசியர் டத்தோ டாக்டர் வான் ரம்லி வான் டாவுட் தெரிவித்தார்.
எனினும் கப்பல் கட்டுமானத்தில் மலாய்க்காரர்கள் முறையும், ரோமானியர்களும் முறையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சாயலைக் கொண்டுள்ளது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
கப்பல் கட்டுமானத்தை மலாய்க்காரர்களிடமிருந்து ரோமானியர்கள் கற்றுக் கொண்டனர் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சொலேஹா யாகோப் வாதிட்டு வருவது தொடர்பில் பேராசியர் டத்தோ டாக்டர் வான் ரம்லி இவ்விளக்கத்தைத் தந்துள்ளார்.








