தைப்பிங், ஜூலை.24-
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஒன்று தடம் புரண்டதில் ஓர் இந்தோனேசிய மாது உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.17 மணியளவில் தைப்பிங், சங்காட் ஜெரிங், தாமான் மெந்தெரி என்ற இடத்தில் நிகழ்ந்தது.
புரோட்டோன் சாகா காரும், பெரோடுவா மைவி காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மூவர் பயணித்த புரோட்டோன் சாகா கார் தடம் புரண்டது.
இதில் இரு பெண்கள் ஓர் ஆண் இருந்தனர். 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் பொதுமக்கள் காப்பாற்றிய வேளையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட 55 வயது இந்தோனேசிய மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்புப்படைப் பேச்சளார் தெரிவித்தார்.








