Mar 29, 2026
Thisaigal NewsYouTube
1எம்டிபி ஊழலின் முக்கியச் சூத்திரதாரிக்கு 2 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

1எம்டிபி ஊழலின் முக்கியச் சூத்திரதாரிக்கு 2 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், மே.30-

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நாட்டின் பிரதமராக இருந்த போது நடந்த மிகப் பெரிய ஊழலான 1எம்டிபி நிதி மோசடியில் முக்கியச் சூத்திரதாரியான கோல்டுமேன் சாச்சஸ் முன்னாள் வங்கி அதிகாரி திம் லேஸ்னருக்கு அமெரிக்கா, நியூ யார்க் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தம்முடையச் செயலுக்காக மிகவும் வருத்தம் கொள்வதாகவும், இதற்காக மலேசிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் லேஸ்னர் தெரிவித்தார்.

தனது கருணை மனுவில், லேஸ்னர் இவ்வாறு தெரிவித்த போது, அவருக்கு நீதிபதி மார்கோ புரோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

வங்கியின் முக்கிய அதிகாரி என்ற முறையில் மிகத் துணிச்சலாக பெரிய ஊழலுக்கு காரணமாக இருந்தது குறித்து லேஸ்னரை நீதிபதி மார்கோ புரோடி கண்டித்தார்.

போலீசாரால் இன்னமும் தேடப்பட்டு வரும் மலேசியத் தொழில் அதிபர் ஜோ லோவின் உதவியுடன் 1எம்டிபிக்காக 650 கோடி அமெரிக்க டாலர் அல்லது கிட்டத்தட்ட 2,600 கோடி மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதில் லேஸ்னர் தலைமையிலான கோல்ட்மேன் சாச்சஸ் வங்கி முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி