இசுலாம் அல்லாத உணவகப் பணியாளர் ஒருவர் சிலுவை அணிந்த காரணத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட வொவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
வேலை இடத்தில் நடக்கும் சமயப் பாகுபாடுகள் குறித்த சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. அந்த அடிப்படையில் அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது குலசேகரன் மக்களவையில் வினவினார்.
இந்த விவகாரத்தை அரசாங்கம் உடனையாக கையாளாவிட்டால், நாடு முழுவதும் இவ்வாறான பாகுபாடு பரவி விடும் எனவும் குலசேகரன் குறிப்பிட்டார்.
இன்று சிலுபைக்கு நேந்த இந்நிலை நாளை திருநீறுக்கும் புடனைக்கும் பல்வேறு இனங்களின் பண்பாட்டு உடைக்கும் நடக்கலாம் என தமது வருத்ததை மக்களவையில் குலசேகரன் பதிவு செய்தார்.








