2025 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 10A எடுத்த சுமார் 6,700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதற்கட்டமாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனம் மற்றும் பின்னணி பாராமல் தகுதியுள்ள அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் அரசின் கொள்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தகுதியிருந்தும் இதுவரை வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள், கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் சிறந்த திறமையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








