கோலாலம்பூர், அக்டோபர்.25-
கனமழையின் காரணமாக பேரா மற்றும் பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கெடாவில் வெள்ளத்தால் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பேராவில் 1,006 பேராக இருந்த அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலையில் 2,963 பேராக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








