கோலாலம்பூர், அக்டோபர்.03-
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிச் சந்தை ஏற்பாடு தொடர்பில் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிஃப், அறிக்கை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.
இணைய ஊடகச் செய்தியில் கூறப்பட்டிருப்பதைப் போல் டத்தோ பண்டார் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று கோலாலாம்பூர் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.
பலத்த காற்றில் கூடாரங்கள் சரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கான கூடாரங்களை வேறு இடத்திற்கு மாற்ற கோலாலம்பூர் மாநகர் மன்றம் பரிசீலனை செய்து வருவதாக அந்த இணைய ஊடகச் செய்தியில் கூறப்பட்டது.








